இன்று பிறந்தநாள் கொண்டாடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல், மத்திய இணையமைச்சராக, நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்றி வரும் எல்.முருகன்
அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.