மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வடபழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட தலைவர் சஞ்சீவி ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கலந்துகொண்டு கோயில் வளாகத்தில் தங்க தேரினை இழுத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டார். இதில் பாஜக-வினர் பலர் கலந்துகொண்டு முருக பெருமானை மனமுருகி தரிசனம் செய்தனர்.