மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணி மேட்டுப்பாளையத்தில் தொடங்கியுள்ளது.
இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர் தொடங்கியுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை செய்யப்பட்டதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு பாஜக நிர்வாகிகள் சென்று நோட்டீஸை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.