பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கண்ணூர் சென்றிருந்தபோது, கேரள சுற்றுலாத் துறை அவருக்கு நிதியுதவி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் கே.சுரேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மல்ஹோத்ராவின் கேரளப் பயணத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் பாஜக மூத்த தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கண்ணூர் பயணத்திற்கு கேரள சுற்றுலா நிறுவனம் நிதியுதவி வழங்கியதாகவும், சுற்றுலா துறையின் அமைச்ச,ர் பினராயி விஜயனின் மருமகன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா யாரைச் சந்தித்தார்? அவர் எங்கு சென்றார்? என அடுக்காக கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். மேலும், பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்கு கேரளா ஏன் வரவேற்பு அளித்தது என்றும் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.