நள்ளிரவில் சென்று பந்தல்குடி கால்வாயை பார்வையிடும் நாடகம் யாரை ஏமாற்ற முதல்வரே? - அண்ணாமலை கேள்வி!
Sep 14, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நள்ளிரவில் சென்று பந்தல்குடி கால்வாயை பார்வையிடும் நாடகம் யாரை ஏமாற்ற முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2025, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  முதலமைச்சர் ஸ்டாலின்,  மதுரை பந்தல்குடி கால்வாய், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த ஆண்டு, மதுரையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை தூர்வாராமல் இருப்பதும் ஒரு காரணம்.

இதனையடுத்து, ₹90 கோடி செலவில், கால்வாயை தூர் வாரி, தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை அதற்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.

நான்கு ஆண்டுகள் கால்வாயை தூர்வார ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற? இந்த நாடகத்தால் யாருக்கு என்ன பயன்?

மதுரை மக்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? கால்வாயை தூர்வார, அமைச்சர்  கே.என்.நேரு அறிவித்த ₹90 கோடி திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவீர்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Pandalgudi canalMadurai Pandalgudi canal issuebjpannamalaiMK StalinMinister K.N. Nehru
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் தரைமட்டம்!

Next Post

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலா துறை நிதியுதவி – கே.சுரேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies