அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிராங், பக்சா, பர்பெட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பிரம்மபுத்ரா ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.
கவுகாத்தியின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையே, மாநிலத்தில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
















