தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மருத்துவராகவும், பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும், ஆளுநராகவும், நமது சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்தவாறு சமூகப் பணிகளாற்றி வரும் தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியமும், அளவற்ற மகிழ்வும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,. நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும், அவர் தன் மக்கள் நலப் பணியை என்றும் சிறப்பாக தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.,