பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இசையால் உலகைக் கட்டி ஆளும் நமது பாரத நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம், பல உலகச் சாதனைகள் படைத்த இசை மேதை, தலைமுறைகள் கடந்து கோடான கோடி நெஞ்சங்களை இன்றும் தன் இசையால் ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறயுள்ளார்.
அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து ரசிகர்களுக்கு “விருந்து படைத்திட” எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.