திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக மதுரையில் காலமானார்.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்ரம் சுகுமாரன், ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்ரம் சுகுமாரன், 6 ஆண்டுகள் பிறகு நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார்.
இந்நிலையில், மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் அடுத்த படத்துக்கான கதையை சொல்லி விட்டு பேருந்தில் ஊர் திரும்பும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.