கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெய்த அதிகப்படியான பருவமழை காரணமாக 71 பேர் உயிரிழந்தனர் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 125 ஆண்டுகளில் மே மாதத்திலும், பருவமழைக்கு முந்தைய காலகட்டத்திலும் பதிவான மிக அதிகபட்ச மழையாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மே மாதத்தில் வழக்கமாக 74 மில்லி மீட்டர் மழை பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு 219 மில்லி மீட்டர் மழை பெய்து, சராசரியை விட 197% அதிகமாகப் பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.