பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சுமார் ஐம்பது ஆண்டுகளாக, நான்கு தலைமுறைகள் கடந்து, இசையுலகை ஆண்டு வரும் இசைஞானி, பாராளுமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதகாவு கூறியுள்ளார்.
நாடு, மொழி, வயது என்ற எல்லைகள் கடந்து, உலக அளவில் இசையால் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் பத்மவிபூஷன் இளையராஜா, நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழவும், மேலும் பலப்பல தலைமுறைகளை தனது இசையால் ஆற்றுப்படுத்தவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அணணாமலை கூறியுள்ளார்.