கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த வடமாநில பெண் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெல்லந்தூரில் தனது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ உரசியதால் ஆத்திரமடைந்த வடமாநில பெண், ஆட்டோ ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தனது செருப்பால் சரமாரியாகத் தாக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெண் மீது தவறு இருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில் அவரை போலீசார் கைது செய்து பின் ஜாமினில் விடுவித்தனர். இந்நிலையில், அந்த பெண்ணும் அவரின் கணவருடன் ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர்.