நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை வெளிப்படைத்தன்மையுடன் மேலாண்மை செய்வதற்கு வசதியாக ‘உமீத்’ எனும் வலைத்தளத்தை மத்திய அரசு வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ளது.
இந்த இணையதளம் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரம் அளித்தல், செயல் திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிச் செயல்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி அனைத்து வக்பு சொத்துக்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கான பதிவுகளை அந்தந்த மாநில வக்பு வாரியங்கள் எளிதாக்கும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யப்படாத சொத்துக்களுக்கு 1 முதல் 2 மாதங்கள் வரை நீட்டிப்பு வழங்கப்படலாம்.