ஐபிஎல் கிரிக்கெட் - முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி
Oct 26, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

Web Desk by Web Desk
Jun 4, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷதீப் மற்றும் ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி வீரர்கள், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் வெற்றிக்காக போராடிய சஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி, 18 ஆண்டுகள் காத்திருப்பின் பலனாக ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி 759 ரன்களை குவித்த தமிழகத்தைச் சேர்ந்த குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன், 18-வது ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதை வென்றார். அதேபோல, இந்த ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதும் சாய் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.

மற்றொரு குஜராத் அணி வீரரான பிரசீத் கிருஷ்ணா, இந்த ஐபிஎல் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றார். இந்த தொடரில் 717 ரன்கள் எடுத்த மும்பை அணி வீரர் சூர்ய குமார் யாதவ் மிகுந்த மதிப்புமிக்க வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். மேலும், இந்த தொடருக்கான ஃபேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

Tags: Bengaluru championrcb championipl cricdte 2025kohili
ShareTweetSendShare
Previous Post

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

Next Post

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies