ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ளார். கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்படப் பலர் நடித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.