கன்னட மொழி குறித்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் எனக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என நம்புவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கன்னடத்தில் சில தெலுங்கு வார்த்தைகள் உள்ளது போலவே தமிழிலும், கன்னடம், தெலுங்கு வார்த்தைகள் கலந்துள்ளதாகக் கூறினார்.
















