சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவதென மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் 2027ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும்,
குளிர் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகாண்டில், கணக்கெடுப்பு பணி 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















