தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இ-ஆதார் வெரிஃபிகேஷன் மூலம் உண்மையான பயனாளர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
எனவே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என கூறியுள்ளார்.
இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த உள்ளது என்றும் இது உண்மையான பயனர்களுக்கு, தேவைப்படும்போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.