கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி பகுதியில் பழமை வாய்ந்த மஹா தேவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பின் பகுதியில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு சொந்தமான 54 சென்ட் நிலம் மற்றும் பழமையான சிவலிங்கம் உள்ளது.
இந்த நிலையில், கோயில் இடத்தை மாற்று மதத்தை சேர்ந்த சுர்ஜித் என்பவர் ஆக்கிரமித்து, அடியாட்கள் மூலம் கம்பி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால், சிவலிங்கத்திற்கு எந்தவித பூஜையும் செய்ய முடியவில்லை என பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.