பாஜக மாநில தலைவர் வானதி சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுபிபினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்னர்.
எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் அவர்களுக்கு,அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தாங்கள் ஆற்றி வரும் கட்சிப் பணிகள் மற்றும் மக்கள் சேவைப் பணிகள் சிறந்திடவும், நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும், நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில், அவர் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று அவரது மக்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.