ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது முடிய வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், போர் நிலைமை குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் சுமார் 75 நிமிடங்கள் பேசியதாகக் கூறியுள்ளார்.
அப்போது உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும், உக்ரைனின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கவிருப்பதாக புதின் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.