தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மடைமாற்றும் அரசியலை நிறுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தைப் பொறுத்தவரைத் தமிழக மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளதாகவும் இந்த விவகாரத்தை வைத்து மடைமாற்றும் அரசியலைச் செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அதனைக் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை அமலுக்கு வராத ஒன்றை வைத்துக்கொண்டு புலி வருது, புலி வருது’ என பூச்சாண்டி காட்டும் வேலையை ஸ்டாலின் செய்து வருவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்
மேலும், மக்கள் மத்தியில் மடைமாற்றும் அரசியல் செய்யும் வேலையைக் கைவிட்டுவிட்டு மாநிலத்தில் திருட்டு சம்பவங்களையும், ரவுடிசத்தையும் எவ்வாறு நிறுத்துவது என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.