ராஜராஜ சோழன் அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே ராஜராஜ சோழன் அருங்காட்சியம் அமைக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக, பெரிய கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் 11 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், தமிழக அரசு இன்னும் பணியைத் தொடங்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளதால், சோழர் அருங்காட்சியகத்திற்கான புதிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், புதிய இடத்தை தேர்வு செய்து ராஜராஜ சோழன் அருங்காட்சியகத்திற்கான பணியைத் தொடங்கி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















