அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பென்சில்வேனியா போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த பேருந்து பராமரிப்பு நிலையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் இருப்பினும் 20க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தீயில் எரிந்து சேதமாகின.