மேலூர் அருகே மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உடன்பட்டியில் உள்ள சிவன்கோவிலைச் சீரமைக்கும் பணியின்போது, தூண் மற்றும் சுற்றுச்சுவரில் பண்டைய கால தமிழ் எழுத்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட தொல்லியில் ஆய்வில் அவை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்வன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்கள் என்பது தெரிய வந்தது.