அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக்கூறி 6 லட்சம் பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரத் தொடங்கின.
விசாரணையில் போலி இணையதளம் உருவாக்கி ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தப்பட்டது தெரியவந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ராமர் கோயில் பிரசாதம் பெற இந்தியாவில் 51 ரூபாய் எனவும், வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் எனவும் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அந்த வகையில் 3 கோடியே 85 லட்சம் ரூபாயை சுருட்டிய அவரை போலீசார் கைது செய்தனர்.