மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதன் கூட்டணி வேட்பாளராக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.