அரசு காப்பக சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளியை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களை அவரது உறவினர்கள் தாக்கியதால் பதற்றம் நிலவியது.
சிட்லபாக்கம் அரசு காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் ஒப்பந்த காவலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ஒப்பந்த காவலாளி மேத்யூவை மருத்துவ பரிசோதனைக்காகக் காவலர்கள் அழைத்துச் சென்றபோது செய்தியாளர்கள் அவரை வீடியோ எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த காவலாளியின் உறவினர்கள் செய்தியாளர்களைத் தாக்க முயன்றனர். தொடர்ந்து, காவலாளி மேத்யூக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
















