கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் குறித்துத் தொடரப்பட்ட கிரிமினல் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி பெங்களூரு கிரிக்கெட் அணி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தாங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகப் பெங்களூரு கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த எண்ணிக்கையிலான பாஸ்கள் மட்டுமே இருந்ததாகவும், இலவச பாஸ் வேண்டும் என்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் எனச் சமூகவலைத்தளங்களில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெகு விரைவில் இந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.