ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மகளிர் விடியல் பயணத்தை, ஓசி பஸ் என்று விமர்சித்ததற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
தற்போது, ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை,மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே என்றும், கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக வேட்பாளரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.