தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீர்வரத்து நிலவரங்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒகேனக்கலில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இருப்பதில்லை என சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் இரவு நேரத்தில் ஒகேனக்கல் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.