பாமக மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின் நீயா? நானா? என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அன்புமணியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பேசியுள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமக்கும், அன்புமணிக்கும் நடக்கும் பிரச்னைகள் முழுவதும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
சிறந்த ஆளுமை உள்ள 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டதாகவும், ராமதாஸ், தான் தொடங்கிய 34 அமைப்புகளும் பஞ்சாயத்து செய்ய வந்ததை கண்டு நொந்துவிட்டதாகவும் கூறினார்.
மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின்னர் நீயா?நானா? என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொறுமையை கடைபிடித்து இருந்தால் தானே அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் என்றும் தெரிவித்தார். தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது என்பது தான் நீதி எனறும் ராமதாஸ் குறிப்பிட்டார்.