அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, விசாரித்தார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து செல்வதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராம் மோகன் நாயுடுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.