அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் 171 இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந் நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.