அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் வெப்பநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸை எட்டியதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருள் இருந்த நிலையில் விமானம் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்பின் காரணமாக விபத்து நடந்த இடத்தில் வெப்பநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸை எட்டியதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.