மதுரையில் வரும் 22ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு போன்றது அல்ல என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு போன்றது அல்ல என்றும் இருசக்கர வாகனத்தில் வரத் தடை செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பல தடைகளை நீக்கி இருக்கிறது என்றும் முருகன் அருளால் இந்த மாநாடு நிச்சயம் சிறப்பாக நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
















