ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பாமகவில் பசுமை தாயாக அமைப்பின் ஆண்டிமடம் ஒன்றிய தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், மணிகண்டன் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், நல்வாய்ப்பாக மணிகண்டனும், அவரது குடும்பத்தினரும் தப்பித்த நிலையில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் மணிகண்டன், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.