ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே தந்தை உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி மகன், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
வெள்ளாள பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ், கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவரது மகன் விக்னேஷ், குற்றவாளிகளைக் கைது செய்யக்கூறிக் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், உறவினர்களுடன் மனு அளித்தார்.