சென்னை புரசைவாக்கத்தில் ஸ்னாப் ஷாட் மூலம் 11ம் வகுப்பு மாணவியுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புரசைவாக்கத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரது தாய், எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து எண்ணூர் மகளிர் போலீசில் மாணவியின் தாய் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த என்ற இளைஞர், ஸ்னாப் ஷாட் ஆப் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.