ஆனி மாத பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. கனமழை காரணமாகப் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்கக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.