வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!
Jul 31, 2025, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்க அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐசிசி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கோப்பை கனவு நிறைவேறியது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் ‘தி ரியல் கிரிக்கெட்’ என்று அனைவராலும் போற்றப்படுவது டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே. ஒருநாள், டி20, டி10 மற்றும்  Hundred எனப் பல ஃபார்மேட்டுகள் வந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ரசிகர் பட்டாளமே தனி.

அத்தகைய ரியல் கிரிக்கெட்டின்,  ரியல் சாம்பியனாக தென்னாப்பிரிக்கா மகுடம் சூடியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளாக ஐசிசியின் அனைத்து ஃபார்மேட்களிலும் கடுமையாகப் போராடி இறுதிப் போட்டி வரை வந்த தென்னாப்பிரிக்க அணி, துரதிருஷ்டவசமாக வெற்றியைத் தவறவிட்டுக்கொண்டே இருந்தது.

பல்வேறு நாக்-அவுட் போட்டிகளில் கடைசி வரை சென்று கோப்பையைத் தவறவிட்டு வந்த தென்னாப்பிரிக்க அணி, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென்னாப்பிரிக்கா.

வங்கதேசத்தில் கடைசியாக 1998ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், மேற்கிந்திய தீவுகளை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் மற்றும் கடைசியான ஐசிசி கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்க அணி.

27 ஆண்டுகளுக்குப் பின் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதுமாகவே, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 9 இல் வெற்றியும், 1 இல் சமனும் செய்து ஒரு தோல்வி கூட காணவில்லை. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தி ரியல் ஜென்டில்மேன்ஸ் கேமின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதுவரையில் தென்னாப்பிரிக்க அணியின் ஒவ்வொரு நாக்-அவுட் போட்டித் தோல்விகளும் கேப்டன்களின் கண்களில் கண்ணீரையும், வீரர்களின் மனங்களில் வருத்தத்தையும், ரசிகர்களின் மனதில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தின. இதுவரை தென்னாப்பிரிக்கா அணி அனைத்து ஃபார்மேட்களிலும் 2 காலிறுதிப் போட்டிகள், 12 அரையிறுதிப் போட்டிகள், 1 இறுதிப் போட்டியில் தோல்வி கண்டுள்ளது.

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர்களில் 1992, 1999, 2007, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டியிலும், 1996 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் காலிறுதிப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் 2024இல் இறுதிப் போட்டியிலும், 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிகளிலும் நாக் அவுட் செய்யப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி தொடர்களைப் பொறுத்தவரை 2000, 2002, 2006, 2013 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதியைத் தாண்டியதில்லை. இவ்வாறாக நாக்-அவுட் என்றாலே தடுமாறும் தென்னாப்பிரிக்கா, நீண்ட காலமாக ‘ஜோக்கர்ஸ்’ அணி என்று அழைக்கப்பட்டு வந்தது.

இத்தனை வருடங்களில் ஹான்சி க்ரோனியே, கிராமி ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ், ஃபாப் டூ பிளெஸிஸ் என பல கேப்டன்களின் கனவுகளை, ஜாக்ஸ் காலிஸ், அலன் டொனால்ட், ஹர்ஷல் கிப்ஸ், மார்க் போச்சர், ஷான் பாலக் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களின் ஆசைகளை தற்போது நிறைவேற்றி விட்டார் டெம்பா பவுமா. 27 ஆண்டுகள் ஒரு ஐசிசி கோப்பையைக்கூடத் தொட்டுப் பார்க்காத தென்னாப்பிரிக்கா, பவுமா தலைமையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இனி இவர்கள் ஜோக்கர்ஸ் அல்ல, சாம்பியன்ஸ்!

Tags: தென் ஆப்பிரிக்காதென்னாப்பிரிக்க அணிஐசிசி கோப்பைSouth Africa made history: The dream came trueபவுமா
ShareTweetSendShare
Previous Post

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Next Post

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

Related News

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

5 ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் : கங்குலி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

அமெரிக்காவின் வரி விதிப்பு : இந்திய நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் – பியூஷ் கோயல் உறுதி!

பரம் சுந்தரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies