கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நாடக ஆசிரியர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ஐந்து ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, மர்மநபர்கள் வழிமறித்து கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், உயிரிழந்த நபர், நாடக ஆசிரியரான வெங்கடேஷன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி படக்கருவிகளை ஆய்வு செய்து மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.