பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்வு, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்ததுள்ளது என்று நாராயணன் திருப்பதி கூறினார்.
நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென அப்துல் கலாமின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வது குற்றச் செயல் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்தால் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நாராயணன் திருப்பதி குறிப்பிட்டார்.