பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது -  அமித்ஷா
Mar 15, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது –  அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சியில், நாடு பாதுகாப்பானதாக மாறியுள்ளது என்று மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நேற்று (15.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித்ஷா, உத்தரபிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு (கான்ஸ்டபிள்கள்) பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய  அமித் ஷா,  உத்தரப்பிரதேச காவல்துறை நாட்டில் மிகப்பெரிய காவல் படை என்றும், ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து இருந்ததாகவும், 2017-ம் ஆண்டில், யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முதலமைச்சரான பிறகு, உத்தரப்பிரதேச காவல்துறை மீண்டும் புதிய உச்சங்களை அடைவதற்கான பாதையில் முன்னேறத் தொடங்கியது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானவுடன், நாட்டில் காவல் துறையை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்தியதாக அமித்ஷா குறிப்பிட்டார்.  ஆனால் உத்தரப்பிரதேசத்தில், அந்த செயல்முறை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொடங்கியது என்று அமித்ஷா  கூறினார்.

2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் எந்த சீர்திருத்த செயல்முறையும் அப்போதைய மாநில அரசால் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அமித்ஷா குற்றம்சாட்டினார்.

2017-ல்தான் உத்தரப்பிரதேச காவல்துறையிலும் சீர்திருத்த செயல்முறை தொடங்கியது என்று அவர் கூறினார். தற்போது 60,244 இளைஞர்களின் ஆட்சேர்ப்பு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மொத்தம் 48 லட்சம் விண்ணப்பங்களில், 60,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சம், அரசியல் செல்வாக்கு, பரிந்துரைகள், சாதி அல்லது ஊழல் ஆகியவை எதுவும் இல்லாமல் முற்றிலும் தகுதி அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் 12,000 க்கும் மேற்பட்டோர் இளம் பெண்கள் என்றும்  அமித்ஷா தெரிவித்தர். மத்திய அரசு பெண்களுக்கு விதித்துள்ள இடஒதுக்கீட்டு விதிகள் உத்தரபிரதேசத்தில் 100% பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

4 லட்சம் பணியாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய காவல் துறையில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்வதாக அமித் ஷா கூறினார். 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கை மீதும் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று அமித்ஷா  கூறினார்.

தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீதியை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் கலவரங்களின் மையமாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம், இப்போது முற்றிலும் கலவரமற்றதாக மாறிவிட்டது என்றும், இந்த பாரம்பரியத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சியில், நாடு பாதுகாப்பானதாக மாறியுள்ளது என்று அமித் ஷா கூறினார். ஒரு காலத்தில் 11 மாநிலங்களில் பரவியிருந்த நக்சலிசம், இப்போது மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2026 மார்ச் 31-க்குள், இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று உள்துறை அமைச்சர்  அமித் ஷா கூறினார்.

Tags: Under the leadership of Prime Minister Narendra Modithe police department across the country is being modernized - Amit Shahமத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா
ShareTweetSendShare
Previous Post

மருது சகோதரர்களின் வீரத்தை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

Next Post

திருப்பூர் : நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் – வீடியோ வைரல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies