தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!
Sep 17, 2025, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

Web Desk by Web Desk
Jun 18, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 தென்னாப்பிரிக்காவை மீண்டும் தலை நிமிரச் செய்த முதல் கருப்பின கேப்டனான டெம்பா பவுமா குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்

இந்த கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணமானவர், தென்னாப்பிரிக்காவை மீண்டும் தலை நிமிரச் செய்தவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின கேப்டனான டெம்பா பவுமா… யார் இந்த டெம்பா பவுமா? தென்னாப்பிரிக்காவின் 27 வருட கனவு எப்படி இவரால் சத்தியமானது? கேப் டவுன் அருகிலுள்ள லாங்கா பகுதியில் பிறந்தவர் பவுமா. இன ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர், சந்திக்காத துயரங்களே இல்லை.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான பவுமா, நிறத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு வந்தார். 2014ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகமானபோது,  மற்ற பார்மெட்களில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு  கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இருப்பினும் அவரது தலைமைப் பண்பைக் கருத்தில் கொண்ட அணி நிர்வாகம், குவின்டன் டீ காக் விலகலுக்கு பிறகு பவுமாவிற்கே முன்னுரிமை வழங்கியது.

ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த பவுமா, 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தி, தான் விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்தார். மேலும், அரையிறுதிக்கும் அழைத்து சென்றார்.

பவுமா 2021ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளை பந்து கேப்டன்சியை தொடர்ந்தாலும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் செய்த சம்பவே இன்று புதிய வரலாற்றை எழுதியுள்ளது. அப்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டீன் எல்கருக்கு பதிலாக பவுமாவை கேப்டனாக நியமித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் கான்ராட்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின டெஸ்ட் கேப்டன் என்ற வரலாற்றை பவுமா படைத்தார். பயிற்சியாளரின் முடிவு மீதும், பவுமாவின் திறமை மீதும் நம்பிக்கை இருந்தாலும், ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், மோர்னே மொர்க்கல் போன்றவர்களின் ஓய்வுபெற்ற பிறகு, பவுமாவின் தலைமைப் பண்பு குறித்து  சந்தேகம் எழுந்தது.

இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் பவுமா-கான்ராட் கூட்டணி வெற்றிகரமாகத் தொடர்ந்தது. 10 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தி 9 வெற்றிகளைப் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பவுமா.

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நான்கு இடங்களைகூட பிடிக்காது எனப் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் போராடி அணியை இறுதிப் போட்டிக்கு அவர் அழைத்து சென்றார். WTC இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை நெருக்கடிக்குள்ளாக்கியது. இரண்டாவது நாளில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இனிங்ஸில் 138 ரன்களில் ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 282 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட, முழு உடல் வலியை தாங்கிக்கொண்டு, தன் ஹாம்ஸ்ட்ரிங் காயத்துடன் 66 ரன்கள் எடுத்தார். அவருடன் 2014 U19 ஹீரோ மார்க்ரம் நிலைத்து ஆடவே, இருவரும் 3வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் வெற்றியும் வசமானது. தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டு விதியாசத்தில் வெற்றிக் கோப்பையை முத்தமிட்டது.

பல வருடங்களாக ஜோக்கர்ஸ் என்ற புனைப்பெயருடன் வலம் வந்த தென்னாப்பிரிக்காவை, தி லெஜண்ட்ஸ் என அனைவராலும் பாராட்டும்படி செய்தார்  இந்த கருப்பின கேப்டன் டெம்பா பவுமா. போட்டிக்குப் பிறகு பேசியபோது கூட, “நம்மை போல பிளவுபட்ட நாட்டுக்கு, இது ஒற்றுமையாக மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பு. எங்கள் மக்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். நாங்களும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம்” எனக் குறிப்பிட்டு ஒற்றுமையை வலியுறுத்தினார்.

டெம்பா என்ற வார்த்தைக்கு நம்பிக்கை என்று பொருளாம். ஒரு காலத்தில் பிரிட்டனால் அடிமையாக்கப்பட்டுக் கிடந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா, இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அதே பிரிட்டன் மக்களின் கரகோஷத்திற்கு இடையே வெற்றிக்கான கோலை கைகளில் ஏந்தி உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இன பிரிவினையை ஒழிக்க, பவுமாவே ஒரு சான்று என்கிறது கிரிக்கெட் உலகம்.

Tags: ICCWTCSouth Africa's hope is fulfilled by Demba Bawamaசாதித்த டெம்பா பவுமாதென்னாப்பிரிக்கா
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

Next Post

மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் – முதல்வருக்கு அண்ணாமலை பதில்!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies