கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றப்பட்டது.
காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்த உதகையைச் சேர்ந்த ரவிக்குமார் தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நகராட்சி ஆணையரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கழிவுநீர் கால்வாய் தரமாகக் கட்டப்படவில்லை என்பதை உறுதி செய்து அதனை இடிக்க உத்தரவிட்டனர்.
















