மதுரை விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலையோரம், புற்களில் திடீரென தீப்பற்றி புகை மூட்டம் ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் உள்ள நிலத்தில் காய்ந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனத்தை உள்ளே கொண்டு செல்ல பாதையில்லாமல் சாலையிலே நிறுத்தினர். பின்னர் மரக்கிளைகளை கொண்டும், கோணிச் சாக்குகளில் தண்ணீரை நனைத்தும் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி தண்ணீர் வண்டி வரவழைக்கப்பட்டு தற்காலிக மோட்டர் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.