மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபுவிடம் பாஜகவினர் வழங்கினர்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், ஆன்மிக பெரியவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பாஜகவினர் அழைப்பிதழை வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.