குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.