ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உணவே மருந்து என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திருச்சியில் இயங்கி வரும் மூலிகை சூப் கடைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இயற்கையான முறையில் தயாரிக்கும் மூலிகை சூப் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக திகழ்கிறது. அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக திருச்சியில் மூலிகை ஜூஸ் கடை நடத்தி வருகிறார் முரளி .

திருச்சி ராஜா பார்க் பகுதியில் அமைந்துள்ள முரளி பழச்சாறு கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறார்கள். காலை 5 மணி முதல் 9 மணி வரை பல வகையான பிரெஷ் ஜூஸ் மற்றும் சூப் ஆகியவற்றை நடை பயிற்சிக்கு வருபவர்களுக்கு குறைந்த விலை தருகிறார்.

காலை வேளையில் வாக்கிங் செல்வர்கள் அந்த கடைக்கு செல்லாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையில் அருகம்புல் ஜூஸ், ஆவாரம் பூ, கேரட் ஜூஸ், வாழை தண்டு, கற்றாழை , உள்ளிட பல அனைத்து வகையான பழச்சாறுகள் கிடைக்கும்.

இன்றைய தலைமுறைக்கு பழங்கால உணவுகளை மீட்டு மீண்டும் அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எடுத்துக்காட்டும் விதமாக இதுபோன்ற இயற்கை உணவகங்கள் மற்றும் மூலிகை சூப் கடைகள் பல தலைதூக்கி வருகிறது. அதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை – பால் பண்ணை அருகே அமைந்துள்ள நண்டு சூப் கடை திருச்சியில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்தக் கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருபவர் செந்தில்குமார். தான் பிறந்து வளர்ந்த பகுதியில் உணவே மருந்து அதுவே மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தாம் இதை ஒரு சேவையாக செய்து வருவதாக கூறுகிறார் செந்தில்குமார்.

இந்தக் கடையில் நண்டு சூப், சோயா ஆகிய இரண்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மூலிகை பொருட்களை கொண்டு தனியாக மசாலா அரைத்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்தக் கடை இரவு 7:30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்திருக்கும். கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் இன்று இந்த நண்டு சூப் மற்றும் சோயா ஆகியவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகிறார்கள்.

ரசாயன பொருட்கள் கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் விளையும் பொருள்களை வைத்து தரமாக விற்பனை செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதற்கு எளிய மனிதர்கள் நடத்தும் கடைகளுக்கு கிடைக்கும் வரவேற்பே சாட்சியாகும்.

ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி புரிந்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

Next Post

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies